Advertisement

அறிவியல்

ஜன. 15: பிரிட்டனில் பரவிய டெல்டா கொரோனா வைரசின் மரபணுவை பிரித்தெடுத்து விஞ்ஞானிகள் சாதனை.
ஜன. 22: கொரோனா தடுப்பூசி 'கோவாக்சின்' பாதுகாப்பானது என அமெரிக்க மருத்துவ இதழ் 'தி லான்செட்' தகவல்.
வருங்கால விஞ்ஞானிகள்: பிப். 7: ராமேஸ்வரத்தில் பள்ளி மாணவர்கள் 100 செயற்கைக்கோளை ஹீலியம் பலுானில் பறக்கவிட்டு சாதனை.
செவ்வாயில் தடம்: பிப். 19: அமெரிக்காவின் 'நாசா' செலுத்திய 'பெர்செவரன்ஸ் ரோவர்' ஆய்வு வாகனம் செவ்வாய் கோளில் தரையிறங்கியது. இதனுடன் அனுப்பப்பட்ட 'இன்ஜெனுாட்டி' சிறிய ரக ஹெலிகாப்டரை (1.8 கிலோ) ஏப்.19ல் பறக்க விட்டு நாசா சாதனை. 12 முறை பறந்தது. அதிகபட்சமாக 39 அடி உயரம் வரை பறந்தது. பூமியை தவிர வேறு கோள்களில் ெஹலிகாப்டர் பறந்தது இதுவே முதல்முறை.
ஒரே ராக்கெட்டில் 19: பிப். 28: 19 செயற்கைக் கோளுடன் பி.எஸ்.எல்.வி., - சி 51 ராக்கெட் ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்பட்டது.
மே 9: கட்டுப்பாட்டை இழந்து பூமிக்கு திரும்பிய சீன ராக்கெட்டின் சிதறிய பாகங்கள் மாலத்தீவு அருகே கடலில் விழுந்தன.
மே 15: சீனாவின் 'ஜூரோங் ரோவர்' விண்கலம் செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கியது.
ஜூன் 26: மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ்- 11 இயங்குதளம் அறிமுகம்.
விண்வெளிக்கு சுற்றுலா: ஜூலை 11: 'யூனிட்டி - 22' ராக்கெட்டில் விண்வெளிக்கு சென்று அமெரிக்காவின் விர்ஜின் கேலக்டிகஸ் நிறுவன தலைவர் ரிச்சர்ட் பிரான்சன் சாதனை. இக்குழுவில் அமெரிக்க இந்திய பெண் ஸ்ரீஷா பாந்தலாவும் ஒருவர்.
ஜூலை 20: 'அமேசான்' நிறுவனர் ஜெப் பெசாஸ் குழுவினரின் விண்வெளி சுற்றுலா வெற்றி.
ஆக. 12: நிலவில் தண்ணீரின் மூலக்கூறு இருப்பதை 'சந்திரயான் - 2' விண்கலத்தில் ஆர்பிட்டர் கண்டுபிடிப்பு.
செப். 6 : நிலவின் சுற்றுப்பாதையை 'சந்திரயான் - 2' விண்கலம் 9,000 முறை சுற்றி வந்ததாக 'இஸ்ரோ' தகவல்.
செப். 16: அமெரிக்காவின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் பொதுமக்கள் 4 பேரை 'இன்ஸ்பிரேஷன் - 4' விண்கலம் மூலம் விண்வெளிக்கு சுற்றுலா அனுப்பி சாதனை.
தானியங்கி ரயில்: அக். 11: உலகின் முதல் தானியங்கி ரயில் ஜெர்மனியின் ஹம்பர்க் நகரில் அறிமுகம். வழக்கமான ரயில்கள் செல்லும் பாதையில் இயங்குவதே இதன் தனிச்சிறப்பு.
அக். 16: சூரிய மண்டல உருவாக்கம், வியாழன் கிரகம் அருகே உள்ள டிரோஜன் சிறுகோளை ஆய்வு செய்ய 'லுாசி' விண்கலத்தை அமெரிக்க விண்வெளி மையம் (நாசா) அனுப்பியது.
நவ. 8: விண்வெளியில் நடந்த முதல் சீன பெண் விஞ்ஞானியாக வங் யபிங் சாதனை.
நவ. 11: ஜெர்மனியின் மத்தியாஸ் மாரர் 51, விண்வெளிக்கு சென்ற 600வது வீரரானார். சர்வதேச விண்வெளி மையத்தில் ஆய்வு மேற்கொள்வார்.
நீண்ட கிரகணம்: நவ. 19: நீண்ட நேர பகுதி சந்திர கிரகணம் (6 மணி நேரம், 2 நிமிடம்) 581 ஆண்டுக்கு பின் நிகழ்ந்தது.
மின்சார கப்பல்: நவ. 22: உலகின் முதல் எலக்ட்ரிக் தானியங்கி சரக்கு கப்பல் நார்வேயில் அறிமுகம். நீளம் 262 அடி. மணிக்கு 28 கி.மீ. செல்லும். தாங்கும் எடை 3200 டன்.
மெகா தொலைநோக்கி: டிச. 25: உலகின் சக்திவாய்ந்த விண்வெளி தொலைநோக்கியான 'ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் டெலஸ்கோப்' பிெரஞ்சு கயானாவில் இருந்து ஏரியன்-5 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது. நாசா, ஐரோப்பிய, கனடா விண்வெளி மையம் இணைந்து இந்த டெலஸ்கோப்பை தயாரித்தன. பூமியில் இருந்து 15 லட்சம் கி.மீ., தொலைவில் உள்ள சுற்றுவட்ட பாதையில் 30 நாட்களில் நிலைநிறுத்தப்படும். இது பிரபஞ்சம் உருவான விதம் பற்றி ஆய்வு செய்யும்.

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement