Advertisement

சினிமா

மீண்டது
கொரோனா பிடியில் இருந்து தமிழ் சினிமா மீண்டது. படப்பிடிப்பு துவங்கியது. தீபாவளிக்கு 50 சதவீத இருக்கையுடன் தியேட்டர்கள் திறக்கப்பட்டன. ஆண்டு இறுதியில் 100 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

வசூலில் 'டாப்'
விஜய்யின் 'மாஸ்டர்' ரூ. 300 கோடி,
ரஜினியின் 'அண்ணாத்த' ரூ.220 கோடி,
சிவகார்த்திகேயனின் 'டாக்டர்',
சிம்புவின் மாநாடு ரூ. 100 கோடி,
கர்ணன், அரண்மனை 3, சுல்தான், ஈஸ்வரன், பாரீஸ் ஜெயராஜ், ருத்ரதாண்டவம், தலைவி ரூ. 5-60 கோடி வசூலித்தன.

யார் முதலிடம்
சமுத்திரகனி (சங்கத்தலைவன், ஏலே, வெள்ளை யானை, விநோதய சித்தம், சித்திரை செவ்வானம், ரைட்டர், உடன்பிறப்பே), விஜய்சேதுபதி (மாஸ்டர், குட்டி ஸ்டோரி, லாபம், துக்ளக் தர்பார், அனபெல் சேதுபதி, முகிழ், நவரசா) தலா 7 படத்தில் நடித்து முதலிடத்தை பிடித்தனர்.

எத்தனை படம்
தியேட்டரில் 135, ஓ.டி.டி.,யில் 42 சேர்த்து 2021ல் 177 படங்கள் வெளியாகின.

'பிளாப்'
ஜெயம் ரவியின் பூமி, சிம்புவின் ஈஸ்வரன் படங்கள் 'பிளாப்' ஆகின.

சர்ச்சை
'ஜெய்பீம்' படத்தின் சில காட்சிகள் சர்ச்சையை கிளப்பின.
நடிகை சமந்தா- நடிகர் நாக சைதன்யா விவாகரத்து.
சமந்தா நடித்த புஷ்பா பட பாடல் சர்ச்சைக்குள்ளானது.

மறக்க முடியாத '83'
கபில் தேவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, உலக கோப்பை வென்றதை கொண்டாடும்'83', புஷ்பா படங்கள் இந்தியா முழுவதும் வெளியாகின.

திருமணம் எப்போ
நடிகை நயன்தாரா- இயக்குனர் விக்னேஷ் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.

பிரியமான பிரியா
நடிகைகளில் பிரியா பவானிசங்கர் (களத்தில் சந்திப்போம், கசடதபற, ஓ மணப்பெண்ணே, பிளட்மணி), ரெஜினா கசாண்ட்ரா ('சக்ரா, கசடதபற, முகிழ், நெஞ்சம் மறப்பதில்லை ) தலா 4 படத்தில் நடித்து முதலிடம் பெற்றனர்.

இனிக்கும் இசை
சந்தோஷ் நாராயணன், யுவன்சங்கர் ராஜா தலா ஏழு படங்களுக்கு இசையமைத்தனர்.

டும்...டும்
விவாகரத்து பெற்றவர்களான நடிகர் விஷ்ணு விஷால்--பாட்மின்டன் வீராங்கனை ஜூவாலா கட்டா திருமணம்.
பாடலாசிரியர் சினேகன் - நடிகை கன்னிகா திருமணம்.

வடிவேலு 'ரிட்டர்ன்ஸ்'
24ம் புலிகேசி பட பிரச்னைக்கு தீர்வு ஏற்பட, வடிவேலு மீண்டும் சினிமாவுக்கு திரும்பினார். சுராஜ் இயக்கும் 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்' படத்தில் நடிக்கிறார்.

சோகம்
நடிகர் நெடுமுடி வேணு, மனோகர், வெங்கட்சுபா, பாடகர் மாணிக்க விநாயகம், நடிகை 'நல்லெண்ணெய்' சித்ரா, இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் மறைந்தனர்.

அந்தாலஜி
ஒரே படத்தில் அதிக கதைகளை (அந்தாலஜி) கொண்ட குட்டி ஸ்டோரி, நவரசா படம் வெளியானது.

பேசப்பட்டவை
சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும், தேன், மண்டேலா படங்கள் சர்வதேச அளவில் பேசப்பட்டன. நயன்தாரா தயாரித்த கூழாங்கல் படம் ஆஸ்கர் பட்டியலில் இடம் பெற்று, கடைசி நேரத்தில் வெளியேற்றப்பட்டது.

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement