Advertisement

நவம்பர்

தமிழகம்
நவ. 1: 1 - 8ம் வகுப்பு மாணவருக்கு 20 மாதத்துக்கு பின் ஷிப்ட் முறையில் பள்ளி திறப்பு.
* வன்னியருக்கான 10.5 சதவீத உள் ஒதுக்கீடு சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.
* கூட்டுறவு வங்கியில் 5 பவுன் வரை நகைக்கடன் தள்ளுபடி.
நவ. 2: சென்னை கொளத்துாரில் ஹிந்து அறநிலையத்துறை சார்பில் கபாலீஸ்வரர் கலை அறிவியல் கல்லுாரி துவக்கம்.
நவ. 3: போலீசாருக்கு வாரத்தில் ஒரு நாள் விடுப்பு வழங்கப்படும் என அரசு அறிவிப்பு.
'ராயல்' பட்டம் நவ. 12: எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை துணைவேந்தர் சுதா சேஷய்யனுக்கு, பிரிட்டனின் ராயல் கல்லுாரி 'பெலோஷிப் அட் ஹொமினேம்' கவுரவ பட்டம் வழங்கியது.
நவ. 12: ஐந்து ஏக்கருக்கு மேல் நிலம் உள்ள விவசாயிக்கு பயிர்க்கடன் தள்ளுபடியை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது.
நவ. 16: தமிழக அரசின் 'வலிமை' சிமென்ட் அறிமுகம்.
நவ. 17: சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, மேகாலயா உயர்நீதிமன்றத்துக்கு இட மாற்றம்.
நவ. 22: சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக முனிஸ்வர் நாத் பண்டாரி பொறுப்பேற்பு.
நவ. 22: ஆடு திருடியவர்களை விரட்டி பிடிக்க முயன்ற திருச்சி கீரனுார் எஸ்.எஸ்.ஐ., பூமிநாதன் கொலை வழக்கில் இரு சிறுவர்கள் உட்பட மூவர் கைது.
நவ. 23: சேலத்தில் சிலிண்டர் வெடித்து 6 வீடு தரைமட்டம். 5 பேர் பலி.
நவ. 24: ஜெ., வசித்த போயஸ் தோட்டம் வேதா இல்லத்தை அரசுடமையாக்கியது செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு.
* அண்ணாமலை பல்கலை துணைவேந்தராக ஆர்.எம்.கதிரேசன் நியமனம்.

இந்தியா
நவ. 2: முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங் 'பஞ்சாப் லோக் காங்.,' கட்சியை துவக்கினார்.
* மஹாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவாரின் ரூ. 1000 கோடி சொத்து வருமான வரித்துறை பறிமுதல்.
நவ. 6: மஹாராஷ்டிராவின் அகமதுநகர் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில் தீ விபத்தில் 11 நோயாளி பலி.
நவ. 7: உ.பி.,யில் உள்ள பைசாபாத் ரயில் நிலையத்தின் பெயர் அயோத்தி கன்டோன் மென்ட் என மாற்றம்.
நவ. 10: தேசிய பேரிடர் மீட்பு படை இயக்குநர் ஜெனரலாக அடுல் ராவல் நியமனம்.
நவ.13: மணிப்பூரில் பயங்கர வாதிகளின் வெடிகுண்டு தாக்குதலில் அசாம் ரைபிள்சின் குகா படை பிரிவு தளபதி விப்லப் திரிபாதி, அவரது மனைவி, மகன், நான்கு வீரர்கள் பலி.
நவ. 14: சி.பி.ஐ., அமலாக்கத்துறை இயக்குநர் பதவிக்காலத்தை 5 ஆண்டாக நீடித்து மத்திய அரசு அவசர சட்டம்.
* ஆந்திராவின் திருப்பதியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் 29வது தென் மண்டல வளர்ச்சி கவுன்சில் கூட்டம் நடந்தது.
* மஹாராஷ்டிராவின் கட்ச்ரோலி மாவட்டத்தில் போலீசார் என்கவுன்டரில் 26 மாவோயிஸ்ட் சுட்டுக்கொலை.
சாலையில் விமானம்: நவ. 16: உ.பி.,யில் விமான ஓடுதளத்துடன் கூடிய பூர்வாஞ்சல் விரைவு ஆறு வழி சாலையை (341 கி.மீ., துாரம்) பிரதமர் மோடி துவக்கினார்.
வீரர்களுக்கு 'சல்யூட்': நவ. 18: 1962 சீன போரில் வீர மரணம் அடைந்த இந்திய வீரர்களின் புதுப்பிக்கப்பட்ட நினைவுசின்னத்தை லடாக்கில் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் திறந்தார்.
நவ. 19: பார்லியில் நிறைவேற்றப்பட்ட மூன்று வேளாண் சட்டங்களை வாபஸ் பெற்றார் பிரதமர் மோடி.
நவ. 20: இந்தியாவின் துாய்மையான நகராக ம.பி.,யின் இந்துார் தேர்வு.
நவ. 24: பல மாநிலங்களில் தக்காளி விலை ரூ. 100ஐ தாண்டியது.
நவ. 25: உள்நாட்டில் தயாரான ஸ்கார்பியன் ரக நீர்மூழ்கி கப்பல், 'ஐ.என்.எஸ்., வேலா' இந்திய கப்பல்படையில் சேர்ப்பு.
நவ. 28: மேற்கு வங்கத்தின் நாடியா மாவட்டத்தில் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றவர் மீது லாரி மோதியதில் 18 பேர் பலி.
நவ. 29: வேளாண் சட்டம் ரத்து செய்யும் மசோதா பார்லி மென்டில் நிறைவேறியது.
அணை உயர...: நவ. 30: உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பின் முல்லை பெரியாறு அணை நீர்மட்டம் நான்காவது முறை (2014, 2015, 2018, 2021) 142 அடியை எட்டியது.

உலகம்
நவ. 1: அமெரிக்காவில் 5 - 11 வயதுக்கு உட்பட்டவர் களுக்கு 'பைசர்' கொரோனா தடுப்பூசி செலுத்த அனுமதி.
நவ. 2: ஆப்கானிஸ்தானின் காபூல் ராணுவ மருத்துவ மனையில் தற்கொலைப்படை தாக்குதலில் 19 பேர் பலி.
நவ. 4: கொரோனாவை குணப்படுத்தும் 'மால்னுபிரவிர்' மாத்திரைக்கு பிரிட்டன் அனுமதி.
நவ. 6: சியாரா லியோன் நாட்டில் பெட்ரோல் டேங்கர் லாரி-- பஸ் மோதியதில் 90 பேர் பலி.
நவ. 10: ஜப்பான் பிரதமராக புமியோ கிஷிடா மீண்டும் தேர்வு.
நவ. 12: மூன்றாவது முறையாக சீனாவின் அதிபராகிறார் ஜி ஜின்பிங். இதற்கான தீர்மானம் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு கூட்டத்தில் நிறைவேறியது.
நவ. 13: ஐ.நா., சர்வதேச சட்ட கமிஷன் உறுப்பினராக இந்தியாவின் பிமல் படேல் 51, தேர்வு.
நவ. 20: ஜோ பைடனுக்கு உடல் நலம் பாதிக்கப்பட, அவர் சிகிச்சை பெற்ற ஒன்றரை மணி நேரம் அமெரிக்க அதிபராக கமலா ஹாரிஸ் (துணை அதிபர்) பதவி வகித்தார்.
நவ. 26: தென் ஆப்ரிக்காவில் புது வகை 'ஒமிக்ரான்' கொரோனா கண்டுபிடிப்பு. இது 'டெல்டா'வை விட வேகமாக பரவும்.
முதல் பெண்: நவ. 29: ஸ்வீடன் முதல் பெண் பிரதமராக மேக்டலினா ஆண்டர்சன் 54, தேர்வு.
நவ. 30: பிரிட்டன் அரசி எலிசபெத் தலைமையில் செயல்பட்டு வந்த பார்படாஸ், குடியரசு நாடாக மாறியது.

டாப் - 4
நவ. 3: கோவாக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு அனுமதி.
நவ. 3: மத்திய அரசு கலால் வரியை குறைத்ததால் லிட்டருக்கு பெட்ரோல் ரூ. 5, டீசல் ரூ. 10 குறைந்தது.
நவ. 29: 'டுவிட்டர்' தலைமை செயல் அதிகாரியாக மஹாராஷ்டிராவின் பராக் அகர்வால் 37, நியமனம்.
நவ. 30: கப்பல்படை தளபதியாக ஹரி குமார் பதவியேற்பு.

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement