Advertisement

அக்டோபர்

தமிழகம்
அக். 5: வள்ளலார் பிறந்த அக். 5, 'தனிப்பெருங்கருணை' நாளாக கடைபிடிக்கப்படும் என அரசு அறிவிப்பு.
அக். 9: கன்னியாகுமரி கிராம்புக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டது.
அக். 11: கொலை வழக்கில் கடலுார் தி.மு.க., எம்.பி., ரமேஷ் சிறையில் அடைப்பு.
அக். 22: நடிகர் விவேக் மரணத்துக்கு கொரோனா தடுப்பூசி காரணமல்ல. உயர் ரத்த அழுத்தத்தால்
மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார் என மத்திய நோய் தடுப்பு பிரிவு அறிக்கை.
அக். 24: தமிழகத்தில் உயரமான ஆஞ்சநேயர் சிலை (37 அடி) ஸ்ரீரங்கம்
அருகே பிரதிஷ்டை செய்யப் பட்டது.
அக். 26: கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் பட்டாசு கோடவுன் தீ விபத்தில் 6 பேர் பலி.
அக். 27: 'இல்லம் தேடி கல்வி' திட்டம் துவக்கம்.

இந்தியா
அக். 1: சுகாதாரமான குடிநீர் வழங்கும் 'அம்ரூத் 2.0' திட்டத்தை பிரதமர் மோடி துவக்கினார்.
அக். 4: கைத்தறியால் ஆன உலகின் பெரிய தேசியக்கொடி லடாக்கின் லே நகரில் நிறுவப்பட்டது. நீளம் 225 அடி. அகலம் 150 அடி. எடை 1000 கிலோ.
அக். 7: அரசுப்பணி பொதுச்சேவையில் தொடர்ந்து 20 ஆண்டுகளை நிறைவு செய்தார் பிரதமர் மோடி.
மீண்டும் டாடா வசம்: அக். 8: ஏர் இந்தியா நிறுவனத்தை ரூ. 18,000 கோடிக்கு டாடா நிறுவனம் ஏலத்தில் வாங்கியது.
அக். 9: டில்லியில் பிரதமர் மோடி - டென்மார்க் பிரதமர் மெட்டே பிரெடெரிக்சன் சந்திப்பு.
அக். 10: இந்திய பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் கடவுள் ராமர், கிருஷ்ணருக்கு தேசிய கவுரவம் அளிக்கும் வகையில் பார்லிமென்ட்டில் சட்டம் இயற்ற அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவு.
கோமாதா.., குலமாதா: அக். 11: திருமலை திருப்பதி அடிவாரத்தில் பசுவுக்கான 'கோ மந்திர்' கோயில் திறப்பு. செலவு ரூ. 15 கோடி.
அக். 12: பிரதமர் மோடியின் ஆலோசகராக அமித் கரே நியமனம்.
அக். 14: பாக்., வங்க தேசத்துடன் எல்லையை பகிரும் பஞ்சாப், குஜராத், மேற்கு வங்கத்தில் எல்லை பாதுகாப்பு படையினரின் அதிகார வரம்பு 15 கி.மீ., ல் இருந்து 50 கி.மீ., ஆக அதிகரிப்பு.
அக். 17: கேரளாவின் இடுக்கி, கோட்டயத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 25 பேர் பலி
அக். 21: இந்தியாவில் 100 கோடி 'டோஸ்' கொரோனா தடுப்பூசி செலுத்தி சாதனை.
அக். 21: உ.பி.,யின் குஷி நகரில் ரூ. 260 கோடி மதிப்பீட்டில் சர்வதேச விமான நிலையம் திறப்பு.
அக். 27: அனைத்து வீடுகளுக்கும் டாய்லெட், மின்சார வசதி அளித்த முதல் மாநிலமாக கோவா தேர்வு.
அக். 27: 'பெகாசஸ்' மென் பொருள் மூலம் அலைபேசி ஒட்டு கேட்கப்பட்டதை விசாரிக்க மூவர் குழுவை உச்சநீதிமன்றம் அமைத்தது.
* டி.ஆர்.டி.ஓ., தயாரித்த 5000 கி.மீ., துார இலக்கை துல்லியமாக தாக்கும் 'அக்னி-5' ஏவுகணை ஒடிசாவில் சோதனை.
அக். 28: போதைப்பொருள் வழக்கில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கானுக்கு மும்பை உயர் நீதிமன்றம் ஜாமின்.
தாஸ் 'பாஸ்': அக். 29: ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் பதவிக்காலம் மூன்றாண்டுக்கு நீடிப்பு.

உலகம்
அக். 1: 'கோவாக்சின்' தடுப்பூசிக்கு ஆஸ்திரேலியா அனுமதி.
இந்திய அழகி: அக். 4: 'மிஸ் வேர்ல்டு அமெரிக்கா' பட்டத்தை
இந்திய வம்சாவளியை சேர்ந்த ஸ்ரீசைனி வென்றார். பஞ்சாப்பின் லுாதியானாவில் பிறந்தவர்.
அக். 5: எத்தியோப்பியா பிரதமராக அபி அகமது மீண்டும் பதவியேற்பு.
அக். 7: பாகிஸ்தானின் பலுசிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 22 பேர் பலி
அக். 11: ஆஸ்திரிய பிரதமராக அலெக்சாண்டர் சேலன்பெர்க் பதவியேற்பு.
அக். 11: துனிசியாவின் முதல் பெண் பிரதமராக நஜ்லா பவ்டன் பதவியேற்பு.
அக். 14: துருக்கியின் ருமெய்சா கெல்கி, உலகின் உயரமான பெண் (7 அடி, 0.7 அங்குலம்) என்ற கின்னஸ் சாதனை படைத்தார்.
அக். 15: ஆப்கனின் கந்தகாரில் மசூதியில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 47 பேர் பலி.
* தைவானின் கோஷியுங் நகரில் 13 மாடி கட்டட தீ விபத்தில் 46 பேர் பலி.
அக். 17: உலகில் முதன்முறையாக விண்வெளியில் ஆவணப்படத்தின் ('தி சேலஞ்ச்') படிப்பிடிப்பை ரஷ்ய திரைப்பட குழுவினர் நடத்தினர்.
அக். 21: நேபாளத்தில் வெள்ளம், நிலச்சரிவில் 88 பேர் பலி.
துணிச்சல் அமைச்சர்: அக். 23: காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து (சட்டப்பிரிவு 370) 2019ல் ரத்து செய்யப்பட்ட பின் முதன்முறையாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்றார்.
அக். 24: உஸ்பெகிஸ்தான் அதிபராக ஷவ்கத் மிர்சியோ யேவ் மீண்டும் தேர்வு.
அக். 25: தென்கொரியா தயாரித்த முதல் ராக்கெட் 'நுாரி' விண்ணில் செலுத்தப்பட்டது.
அக். 25: சூடானில் ஆட்சியை கைப்பற்றியது ராணுவம்.
அக். 26: கனடா பாதுகாப்பு துறை அமைச்சராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அனிதா ஆனந்த் நியமனம்.
* ஜப்பான் இளவரசி மேக்கோ, சாதாரண குடும்பத்து கீய் கேமுரோவை திருமணம் செய்தார். அரச பட்டத்தையும் துறந்தார்.
அக். 29: பேஸ்புக் நிறுவனத்தின் பெயர் மெட்டா என மாற்றம். மெட்டா நிறுவனத்தின் கீழ் பேஸ்புக் , வாட்ஸ்ஆப், இன்ஸ்டாகிராம் இயங்கும்.
அக். 30: இத்தாலியில் 'ஜி - 20' மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்பு.

டாப் - 4

அக். 3: பவானிபூர் இடைத்தேர்தலில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி வெற்றி.
அக். 4: ஜப்பான் பிரதமராக புமியோ கிஷிடா பதவியேற்பு.
அக்.7: மலேரியா தடுப்பூசிக்கு (ஆர்டி.எஸ்.எஸ்) உலக சுகாதார அமைப்பு அனுமதி.
அக். 30: வாடிகனில் போப் பிரான்சிஸ் - பிரதமர் மோடி சந்திப்பு.

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement