Advertisement

ஜூன்

தமிழகம்
ஜூன் 4: சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் கொரோனாவுக்கு சிங்கம் பலி.
ஜூன் 5: கொரோனா அச்சுறுத்தலால் பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து.
ஜூன் 7: சென்னை வடபழநி ஆண்டவர் கோயிலுக்கு சொந்தமான ரூ. 300 கோடி மதிப்பு நிலம் மீட்பு.
ஜூன் 9: இந்து சமய அற நிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில் நில உரிமை ஆவணம் இணையதளத்தில் வெளியீடு.
ஜூன் 14: எதிர்க்கட்சி துணைத்தலைவராக அ.தி.மு.க.,வின் பன்னீர் செல்வம் தேர்வு.
ஜூன் 15: புதுச்சேரி சட்டசபை சபாநாயகராக செல்வம்(பா.ஜ.,) தேர்வு.
ஜூன் 16: வண்டலூர் உயிரியல் பூங்காவில் கொரோனாவுக்கு ஆண் சிங்கம் பலி.
ஜூன் 18: தமிழகத்தில் கொரோனாவுக்கான ஸ்புட்னிக்-வி தடுப்பூசி செலுத்தும் பணி துவக்கம்.
ஜூன் 20: நடிகை சாந்தினியை மிரட்டிய புகாரில் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் மணிகண்டன் பெங்களூருவில் கைது.
ஜூன் 21: தமிழக சட்டசபை முதல் கூட்டம்.
ஜூன் 27 : புதுச்சேரியில் 5 அமைச்சர்கள் பதவியேற்பு.

இந்தியா
ஜூன் 1: கொரோனா அச்சுறுத்தலால் சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 பொதுத்தேர்வை மத்திய அரசு ரத்து செய்தது.
ஜூன் 3: பீஹாரில் இன்ஜினியரிங், மருத்துவ படிப்பில் மாணவிகளுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு.
ஜூன் 3: அரசு அதிகாரிகள் ஓய்வு பெற்றவுடன் தனியார் நிறுவனத்தில் சேரக்கூடாது என ஊழல் தடுப்பு கண்காணிப்பு ஆணையம் உத்தரவு.
ஜூன் 7: மஹாராஷ்டிராவின் புனேயில் உள்ள ரசாயன ஆலை தீ விபத்தில் 17 பேர் பலி.
ஜூன் 9: இந்திய தேர்தல் ஆணையராக அனுப் சந்திர பாண்டே நியமனம்.
ஜூன் 9: உ.பி.,யின் கான்பூரில் இரட்டை மாடி பஸ் - வேன் மோதியதில் 19 பேர் பலி.
ஜூன் 12: ராஜஸ்தானின் பிகானேரில் வீடுகளுக்கு சென்று கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் துவக்கம்.
ஜூன் 14: இந்தியாவில் உருமாறிய டெல்டா பிளஸ் கொரோனா கண்டுபிடிப்பு.
ஜூன் 16: அரசின் விதிகளை ஏற்காத 'டுவிட்டர்' நிறுவனத்தின் சட்டப்பாதுகாப்பு நீக்கம்.
டில்லியில் முதல்வர்: ஜூன் 17: டில்லியில் பிரதமர் மோடி - முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு.
ஜூன் 21: ஒரே நாளில் 81 லட்சம் டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தி இந்தியா சாதனை.
ஜூன் 23: கடன் மோசடி செய்த விஜய் மல்லையா, நிரவ் மோடி, மெஹுல் சோக்சியின் ரூ. 9371 கோடி சொத்து அரசு வங்கிகளுக்கு மாற்றம்.
அனலாய் அக்னி: ஜூன் 28: ஒடிசாவில் 'அக்னி பிரைம்' ஏவுகணை சோதனை நடந்தது. அணுகுண்டுடன் 1000 - 2000 கி.மீ., துாரம் சென்று தாக்கும்.
ஜூன் 28: மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் வேணுகோபால் பதவி ஓராண்டு நீடிப்பு.
ஜூன் 29: ம.பி.,யின் பிதாம்பூரில் ஆசியாவின் நீளமான (11.3 கி.மீ. ) அதிவேக சாலை திறப்பு.

உலகம்
ஜூன் 1: இந்தியாவில் கண்டறியப்பட்ட கொரோனா வுக்கு 'காப்பா (பி.1.617.1)' , 'டெல்டா(பி.1.617.2)', என உலக சுகாதார நிறுவனம் பெயரிட்டது.
ஜூன் 1: உலகின் முதன்முறையாக சீனாவில் மனிதருக்கு பறவைக்காய்ச்சல் (எச்10என்3) பாதிப்பு கண்டுபிடிப்பு.
ஜூன் 4: பிரிட்டனில் 12 - 15 வயது சிறுவர்களுக்கு பைசர் கொரோனா தடுப்பூசி செலுத்த அனுமதி.
ஜூன் 6: சீனாவில் 3 - 17 வயதினருக்கு 'கொரோனாவாக்' தடுப்பூசி செலுத்த அனுமதி.
ஜூன் 7: பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் ரயில் மோதியதில் 63 பேர் பலி.
ஜூன் 8: ஐ.நா., சபை தலைவராக மாலத்தீவு வெளியுறவு அமைச்சர் அப்துல்லா ஷாகித் தேர்வு.
ஜூன் 10: ரஷ்யாவில் 24 ஆயிரம் ஆண்டு பனியில் உறைந்த 'ரோட்டிபர்' நுண்ணிய விலங்கு மீண்டும் உயிர் பெற்றது.
ஜூன் 12: லண்டனில் நடந்த 'ஜி-7 'உச்சி மாநாட்டில், ஏழை நாடுகளுக்கு 100 கோடி தடுப்பூசி வழங்க ஒப்புதல்.
ஜூன் 13: இஸ்ரேல் நீண்ட கால (15 ஆண்டு) பிரதமரான பெஞ்சமின் நேதன்யாகு, தேர்தல் தோல்வியால் பதவி விலகினார்.
எல்லாம் நாதெல்லா: ஜூன் 17: அமெரிக்காவின் மைக்ரோசாப்ட் நிறுவன சி.இ.ஓ., சத்யா நாதெல்லா (இந்தியா), அதன் இயக்குநர் குழு தலைவராகவும் நியமனம்.
ஜூன் 17: டியன்ஹி விண்வெளி ஆய்வு கூடத்திற்கு மூன்று வீரர்களை அனுப்பியது சீனா.
ஜூன் 18: கனடா உச்சநீதிமன்ற நீதிபதியாக இந்திய வம்சாவளியை சேர்ந்த மஹ்மூத் ஜமால் நியமனம்.
* போட்ஸ்வானாவில் உலகின் மூன்றாவது பெரிய வைரம் கண்டுபிடிப்பு. எடை 1098 காரட்.
மின்னல் கட்டடம்: ஜூன் 19: சீனாவில் 28 மணி நேரம், 45 நிமிடத்தில் 10 மாடி கட்டடம் கட்டி சாதனை.
ஜூன் 19: ஈரான் அதிபராக இப்ராஹிம் ரைசி தேர்வு.
* ஐ.நா., சபையின் பொதுச்செயலராக அன்டோனியா குட்டெரஸ் மீண்டும் தேர்வு.
ஜூன் 24: சீனாவின் அடக்குமுறையால் ஹாங்காங்கின் 'ஆப்பிள் டெய்லி' பிரசுரம் நிறுத்தம்.
ஜூன் 25: திபெத் தலைநகர் லாசாவில் மின்சார புல்லட் ரயில் சேவையை சீனா துவக்கம்.
'டிரோன்' தாக்குதல்: ஜூன் 27: ஜம்மு விமானப்படை தளத்தின் மீது பாக்., பயங்கரவாதிகள் முதன்முறையாக 'டிரோன்' வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். இதில் பாதிப்பு ஏற்படவில்லை.

டாப் - 4

* ஜூன் 3: 'டெட்' தேர்வு சான்றிதழ் வாழ்நாள் முழுவதும் செல்லும் என மத்திய அரசு அறிவிப்பு.
* ஜூன் 13: இஸ்ரேல் பிரதமராக நப்தாலி பென்னட் பதவியேற்பு.
* ஜூன் 16: தங்க நகைக்கு கட்டாயம் 'ஹால்மார்க்' முத்திரை அமல்.
* ஜூன் 29: தமிழக டி.ஜி.பி., யாக சைலேந்திரபாபு நியமனம்.

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement