Advertisement

திமுக எம்எல்ஏ அடிக்க பாய்ந்த சம்பவம்! 20 பேர் மீது வழக்கு! | DMK | MLA Ebenezer | Chennai flood | vi

சென்னை ஆர்கே நகர் தொகுதி கொருக்குப்பேட்டையில் வெள்ளம் பாதித்த பகுதிக்கு வந்த திமுக எம்எல்ஏ எபினேசரை மக்கள் முற்றுகையிட்டனர். மழை பெய்த போது யாரும் பார்க்க வரவில்லை; இப்போது ஏன் நிவாரணம் வழங்க வந்தீர்கள்? என்று இளைஞர் பாபு என்பவர் கேள்வி எழுப்பினார். அவரை எம்எல்ஏவும் அவரது ஆதரவாளர்களும் அடிக்க பாய்ந்தனர். இந்த வீடியோ பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஒரு கட்டத்தில் பாபுவை எம்எல்ஏ ஆதரவாளர்கள் தாக்கினர். பாபு ரத்தம் சொட்ட சொட்ட நிற்கும் வீடியோவும் வெளியானது. இந்த சம்பவம் குறித்து விளக்கம் அளித்த எம்எல்ஏ, இது அதிமுகவின் திட்டமிட்ட சதி. தனது ஆதரவாளர்களோ அல்லது திமுகவினரோ யாரையும் தாக்கவில்லை என்றார். இதற்கிடையே ஆர்கே நகர் போலீசில் பாபு புகார் செய்தார். இப்போது எம்எல்ஏ ஆதரவாளர்கள் 20 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். விசாரணை தொடர்கிறது.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement