Advertisement

ஒரே எண்ணம் மீண்டும் மீண்டும் வருவது ஒருவகை நோயா? மனமே நலமா? பகுதி- 23 | Dr.Srinivasan

எண்ண, செயல் சுழற்சி நோய் அல்லது எண்ண, செயல் நிர்ப்பந்த நோய் என்றால் என்ன?. நமது மனதில் மீண்டும் மீண்டும் தோன்றக்கூடிய எண்ணங்கள் மற்றும் அது தொடர்பான செயல்களைத் தான் இப்படி குறிப்பிடுகிறோம். இந்த எண்ணங்களும், செயல்களும் எல்லோருக்கும் வந்தாலும் கூட எப்போது அவை மிகையாகின்றனவோ, இயல்பு வாழ்க்கையை பாதிக்கின்றனவோ அப்போது அதை நோய் என்கிறோம். உதாரணத்திற்கு கொரோனா காலத்திற்கு பிறகு கைகழுவுவதும், சுத்தமாக இருப்பதும் அதிகமாகி விட்டது. ஆனால் கை கழுவுவதையே 5 முறை, 10 முறை, 20 முறை, 40 முறை என்று செய்யும் போது அது பிரச்னையாகி விடுகிறது. அடிப்படையில் இருக்க வேண்டிய அந்த எச்சரிக்கை உணர்வு, பாதுகாப்பு உணர்வு அத்தகைய நோய்க்கு காரணமாகி விடுகின்றன. இத்தகைய எண்ண, செயல் சுழற்சி நோய் அல்லது எண்ண, செயல் நிர்ப்பந்த நோய் குறித்து இந்த காணொளி தொகுப்பு விளக்குகிறது.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement