Advertisement

வெட்ட வெளியில் சமைக்கும் அவலம் | school issue

நீலகிரி மாவட்டம் பந்தலூர் அ ருகே நெல்லியாளம் குன்றில்கடவு பகுதியில் அரசு ஆரம்பப்பள்ளி உள்ளது. இங்குள்ள சத்துணவுக் கூடம் பழுதடைந்ததால் 2021ம் ஆண்டு அகற்றப்பட்டது. வகுப்பறை கட்டிடம் சமையல் கூடமாக மாற்றப்பட்டதால் மாணவர்கள் பாதிக்கப்பட்டனர். பெற்றோர் புகார் கூறியதையடுத்து திறந்த வெளியில் சத்துணவு கூடம் செயல்பட்டது. மழை காலங்களில் சமையலர்கள் சிரமம் அடைகின்றனர். புதிதாக சத்துணவு கூடம் கட்டப்படும் என நெல்லியாளம் நகராட்சி நிர்வாகம் உறுதி அளித்தும் பயனில்லை. பள்ளி அருகே திமுகவைச் சேர்ந்த நெல்லியாளம் நகராட்சி தலைவர் வீடு உள்ளது. அவரது சொந்த ஊரில் சத்துணவு கூடம் இல்லை. பள்ளி சிறுவர்கள் நலன் கருதி விரைவில் சமையல் கூடம் கட்ட வேண்டும். தாமதித்தால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என பெற்றோர் எச்சரித்தனர்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement