Advertisement

பூந்தமல்லி அருகே படகில் பள்ளி செல்லும் மாணவர்கள்! | Chennai flood | Cyclone Michaung | Poonamallee

மிக்ஜாம் புயல் ஓய்ந்து ஒரு வாரம் ஆகியும் சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள சில இடங்களில் வெள்ளம் வடியவில்லை. பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டை ஊராட்சியில் யமுனா நகர் பகுதி மக்கள் இன்னும் வெள்ளத்தில் சிக்கி தவிக்கின்றனர். இங்குள்ள குடியிருப்புகளை சுற்றி இடுப்பளவுக்கு தண்ணீர் தேங்கி நிற்கிறது. மக்கள் முகாம்களிலும் மாடி வீடுகளிலும் தஞ்சம் புகுந்துள்ளனர். ஒரு வாரம் கழித்து இன்று பள்ளிகள் திறக்கப்பட்டன. மாணவர்களால் வீடுகளை விட்டு வெளியே வர முடியாத நிலை இருப்பதால் ராட்சத படகுகள் வர வழைக்கப்பட்டன. அதில் ஏறி மாணவர்கள் பள்ளி சென்றனர். செம்பரம்பாக்கம் ஏரிக்கு பக்கத்தில் யமுனா நகர் இருப்பதால் தண்ணீர் ஊற்றெடுத்து விட்டது. எனவே வெள்ளம் வடிவதில் சிக்கல் இருப்பதாக மக்கள் கூறினர்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement