Advertisement

சென்னையில் ஒரு வாரமாக வடியாத வெள்ளம்! மக்கள் அதிர்ச்சி | Chennai Flood | Cyclone Michaung

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை வளசரவாக்கம் எஸ்விஎஸ் நகர், சுப்பிரமணியன் நகர், ஸ்ரீதேவி குப்பம் பகுதியில் 500க்கும் மேற்பட்ட வீடுகளில் மழை வெள்ளம் சூழ்ந்தது. மழை நின்று ஒரு வாரம் ஆகியும் வெள்ளம் வடியவில்லை. ராட்சத மோட்டார்களை வைத்து தண்ணீரை அகற்றும் பணி தொடர்ந்தாலும் இதுவரை வெள்ளம் வடியாததால் மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர். இன்னும் மின் வினியோகம் துவங்கவில்லை. கும்மிருட்டில் மக்கள் தவிக்கின்றனர். அத்தியாவசிய பொருட்கள் வாங்க இடுப்பளவு தண்ணீரில் செல்கின்றனர். எப்போது தான் அரசு விடியல் தருமோ என்று குமுறி வருகின்றனர்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement