Advertisement

விளை பொருளுக்கு இரண்டு மடங்கு விலை என்னாச்சு | Ayyakkannu

திருச்சியில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க ஒன்றிய, மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நடைபெற்றது. இரண்டு மடங்கு லாபகரமான விலையை விளை பொருட்களுக்கு பெறுவது. இந்திய அளவில் விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்வது, விவசாய உணவு பொருட்களை இறக்குமதி செய்யக் கூடாது, கோதாவரி - காவேரி இணைப்புக்கு மத்திய அரசு நிதி ஒதுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Comments Comments (1)


வாசகர் கருத்து (1)
ellar
ellar - New Delhi,இந்தியா . 12-டிச-2023 09:06 IST

இவர் விவசாயிகளுக்காக உண்மையாக போராடுவதை நிறுத்திவிட்டு தன்னுடைய சொந்த திட்டங்களை நிறைவேற்றி வருகிறார் என்பதற்கு ஆதாரம் இவர் தன்னை பற்றி தெரிவிக்கும் ஒரு பதவி இந்த மாதிரியான ஒரு கூட்டமைப்பு என்று ஒன்று இல்லை அதற்கு இவர் தலைவராக தேர்ந்தெடுக்கப்படவும் இல்லை பல சில வருடங்களாக அமைதியாக இருந்து விட்டு எதிர்வரும் தேர்தலை நோக்கி தன்னுடைய அட்டைக் கத்தியை சுழற்றிக் கொண்டிருக்கிறார் என்பது உண்மை. விவசாயிகளுடைய விளைபொருட்கள் தகுந்த விலை நிர்ணயிக்க வேண்டும் என்பதுதான் கோரிக்கை இரண்டு மடங்கு வேண்டும் என்று எந்த ஒரு விவசாய அமைப்பும் கேட்கவில்லை இவர் சொல்லாத வார்த்தைகளை கேட்காத கோரிக்கைகளை பிரபலமாவதற்காக முன் வைக்கிறார் இதன் மூலம் விவசாய தேவைகளை மக்களிடம் தவறாக முன்வைத்து விவசாயிகளினுடைய பெயரைக் கெடுக்கிறார்

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement