Advertisement

திறமைகளை வெளிக்காட்டி மாணவ, மாணவிகள் அசத்தல்|Silambam Competition

நாமக்கல் மாவட்ட சிலம்பம் கலைக்குழு மற்றும் பாரத மாதா சிலம்பம் பயிற்சி பள்ளி சார்பில் நாமக்கல் கீரம்பூர் கொங்கு பள்ளி வளாகத்தில் மாநில சிலம்பம் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் 5 முதல் 12 வயதுக்கு உட்பட்ட மற்றும் 12 முதல் 20 வயதுக்கு உட்பட்ட மாணவ மாணவிகள் 850 பேர் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சிக்கு பாரத மாதா சிலம்பம் பயிற்சி பள்ளி தலைவர் கார்த்திகேயன் தலைமை வகித்தார். சிலம்பம், வாள் வித்தை, சுருள் மற்றும் தற்காப்பு என நான்கு பிரிவுகளாக போட்டிகள் நடைபெற்றன. இதில் மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தனித் திறமை மற்றும் கூட்டு வித்தைகளை கையாண்டனர் .

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement