Advertisement

துபாய், சிங்கப்பூர் டு சென்னைக்கு ₹1 கோடி தங்கம் கடத்தல்! சிக்கியது எப்படி? |Chennai Airport

சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்த விமான பயணிகளை ஏர்போர்ட்டில் சுங்க அதிகாரிகள் சோதனை செய்தனர். சுற்றுலா விசாவில் சிங்கப்பூர் சென்று திரும்பிய சென்னை பெண் மீது சந்தேகம் ஏற்பட்டது. தனி அறையில் அவரை சோதித்த போது, உள்ளாடையில் தங்கத்தை மறைத்து கடத்தி வந்தது தெரிந்தது. அவரிடம் மொத்தம் 473 கிராம் தங்க செயின்கள் கைப்பற்றப்பட்டன. இதன் மதிப்பு 26.27 லட்சம் ரூபாய். பெண்ணை கைது செய்து விசாரிக்கின்றனர். இதே போல் துபாயில் இருந்து சென்னை வந்த விமானத்தை ஊழியர்கள் சுத்தம் செய்த போது சீட்டுக்கு அடியில் மர்ம பொருள் இருந்தது.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement