Advertisement

உணவு பொருட்கள், துணிகள், குடிநீர் கலெக்டர் அலுவலகத்தில் ஒப்படைப்பு |Namakkal

சென்னை புயலால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் ஜவுளி உற்பத்தியாளர்கள், வியாபாரிகள், பொது மக்கள், நில முகவர்கள் சங்கத்தினர், தன்னார்வலர்கள் சார்பாக நிவாரண பொருட்கள் ஒப்படைக்கும் நிகழ்வு நடந்தது. குமாரபாளையம் நகர மன்ற தலைவர் விஜயகண்ணன் ஏற்பாட்டின் பேரில், நகராட்சி ஆணையாளர் சரவணன் தலைமையில் 10 லட்சம் மதிப்பிலான அரிசி, கோதுமை, எண்ணெய் உள்ளிட்ட உணவுப்பொருட்கள், சட்டை, வேஷ்டி துண்டுகள், பக்கெட் மற்றும் மக்குகள், பிஸ்கட், குடிநீர் கேன்கள் உள்ளிட்டவை லாரி மூலம் கலெக்டர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது. அங்கிருந்து நிவாரண பொருட்கள் சென்னைக்கு அனுப்பப்படவுள்ளது.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement