Advertisement

பள்ளி மாணவர்கள் சிறு சிறு காயங்களுடன் உயிர் தப்பினர் | Hosur

ஓசூரில் பள்ளி மாணவர்களை ஏற்றி கொண்டு தனியார் பள்ளி பஸ் ஒசூர் பாகலூர் ரோட்டில் சென்றது. பஸ்சை டிரைவர் பெல்லப்பா ஓட்டினார். மாரச்சந்திரம் என்ற இடத்தில் பஸ் சென்ற போது கொண்டிருந்தது. கர்நாடக மாநிலம் மாலூரில் இருந்து ஓசூர் நோக்கி வந்த அரசு பஸ் தனியார் பள்ளி பஸ் மீது மோதி விபத்துக்குள்ளானது. 2 பேருந்துகளும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில், தனியார் பள்ளி பஸ் டிரைவர் பெல்லப்பாவுக்கு கால் முறிவு ஏற்பட்டது. அரசு பஸ் டிரைவர் பாலசந்தருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அரசு பஸ்சில் பயணம் செய்த 2 பெண்கள் உள்பட 9 பேர் படுகாயமடைந்தனர். பள்ளி பேருந்தில் பயணம் செய்த மாணவர்கள் சிறு காயங்களுடன் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர். அனைவரையும் மீட்ட பொதுமக்கள் தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் ஓசூர் அரசு ஆஸ்பிடலுக்கு மேல் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். பாகலூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement