Advertisement

15 நாட்களில் 2.466 மில்லியன் கன அடி தண்ணீர் வெளியேற்றம் | Theni

தேனி மாவட்டம் வைகை அணை நீர்மட்டம் 70 அடியாக உயர்ந்ததை தொடர்ந்து அணையில் இருந்து மதுரை, திண்டுக்கல் மாவட்ட ஒருபோக பாசனத்திற்காக பாசனக்கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டது. அதனை தொடர்ந்து வைகை அணையின் பூர்வீக பாசன பகுதிகளுக்கு 1, 2, 3 கட்டங்களாக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்க அரசு உத்தரவிட்டது. முதல் 2 கட்டங்களாக தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் 3 ம் கட்டமாக இன்று காலை வினாடிக்கு 1500 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. 3 நாட்களுக்கு வைகை அணையில் இருந்து மொத்தமாக 343 மில்லியன் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட உள்ளது. முதல் 2 நாட்களுக்கு வினாடிக்கு 1500 கனஅடியும், 3 வது நாளில் 970 கன அடியும் திறக்கப்பட உள்ளது. கடந்த மாதம் 23 ம் தேதி முதல் தற்போது வரை 2,466 மில்லியன் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டுள்ளது.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement