Advertisement

அதிமுக மருத்துவ அணி இணைச் செயலாளர் டாக்டர் சரவணன் கண்டனம் | Karunanithi festival

எம்ஜிஆர் நினைவு நாள் டிசம்பர் 24ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. அன்றைய தினம் அமைச்சர் உதயநிதி நிர்பந்தத்தின் பேரில் திரைத்துறையினர் கருணாநிதி 100 என்று பிரமாண்டமான விழாவை சென்னை சேப்பாக்கத்தில் நடத்த ஏற்பாடுகளை செய்து வருவதாக செய்திகள் வருகின்றன. விழாக்களை நீங்கள் நடத்த வேண்டாம் என்று யாரும் கூறவில்லை. ஆனால் எம்ஜிஆர் நினைவு நாளில் நடத்துவது தான் அநாகரீகமான செயல். இது வேதனையாக உள்ளது. மேலும் நடிகர் விஜயகாந்த் தற்போது மருத்துவமனையில் உள்ளார். இந்த நேரத்தில் கருணாநிதி 100 விழா தேவையா என சில சினிமாத்துறையை சேர்ந்தவர்கள் கேள்வி எழுப்புகின்றனர். எம்ஜிஆர் நினைவு நாளில் கருணாநிதி நூற்றாண்டு விழாவை நடத்தும் நீங்கள் கருணாநிதி நினைவு நாளில் இதுபோன்ற பல தலைவர்களுக்கு விழாக்களை நடத்த தயாரா என சாமானிய மக்கள் கேட்கிறார்கள். எம்ஜிஆர் தனது பெரியப்பா என முதல்வர் ஸ்டாலின் கூறுவது நாட்டு மக்களை ஏமாற்றும் வேலையாகும் என மருத்துவ அணி இணைச் செயலாளர் டாக்டர் சரவணன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement