Advertisement

கடைகளுக்கு சீல் வைத்தால் தற்கொலை செய்வதாக வியாபாரிகள் மிரட்டல் | confiscation of polythene bags

நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே எருமாடு பகுதியில் உள்ள சில கடைகளில் பாலிதீன் கவர்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்தது. அதைத் தொடர்ந்து கூடலூர் ஆர். டி .ஓ. முகமது குதரத்துல்லா, பந்தலூர் தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான அதிகாரிகள் கடைகளில் சோதனை நடத்தினர். அப்போது இறைச்சி கடைகளில் பாலிதீன் கவர்களை குப்பை தொட்டியில் மறைத்து வைத்து பயன்படுத்தியது தெரிய வந்தது. அதைத் தொடர்ந்து எண்ணெய் மற்றும் மசாலா பொருட்கள் தயாரிப்பு கூடத்தில் நடந்த சோதனையில் மறைத்து வைத்திருந்த 30 கிலோ பாலிதீன் கவர்களை பறிமுதல் செய்தனர். அதைத் தொடர்ந்து கடைக்கு சீல் வைக்க முற்பட்டபோது கடை உரிமையாளர் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மிரட்டினார். கடைக்கு சீல் வைத்தால் போராட்டத்தில் ஈடுபடுவதாக வியாபாரிகள் அதிகாரிகளை எச்சரித்தனர். இதையடுத்து வியாபாரிகளுடன் அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் ஒருமுறை அபராதம் விதித்து விடுவிக்கும்படி வியாபாரிகள் கேட்டு கொண்டனர். இனிவரும் காலங்களில் பாலிதீன் கவர்கள் மற்றும் பாட்டில்கள் பயன்படுத்த மாட்டோம் என வியாபாரிகள் உறுதியளித்தனர். அதை அதிகாரிகள் ஏற்று 22,000 ரூபாய் அபராதம் விதித்தனர். பாலிதீன் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்து சென்றனர். அதிகாரிகளை வியாபாரிகள் மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement