Advertisement

மாநில த்ரோபால் போட்டி விறுவிறுப்பான ஆட்டம்

பீனிக்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் மற்றும் கோவை மாவட்ட த்ரோபால் சங்கம் சார்பில் முதலாம் ஆண்டு மாநில த்ரோபால் போட்டி நாகினி பள்ளி மைதானத்தில் நடைபெற்றது. ஆண்கள், பெண்கள் இரு பிரிவுகளில் 30 க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன. நாகினி வித்யாலயா பள்ளி தாளாளர் சுப்புலட்சுமி துவக்கி வைத்தார். ஆண்கள் பிரிவில் கரூர் கே.டி.ஜி அணி முதலிடத்தையும், ஈரோடு மெஜஸ்டிக் த்ரோபால் கிளப் அணி இரண்டாமிடத்தையும், ஒசூர் ஸ்போர்ட்ஸ் கிளப் மூன்றாமிடத்தையும் பிடித்தன. பெண்கள் பிரிவில் உடுமலை ஸ்பார்ட்ன்ஸ் அணி முதலிடம், கரூர் கே.டி.ஜி அணி இரண்டாமிடம், திருச்சி டைடன்ஸ் அணி மூன்றாமிடம் பிடித்தன. ஆண்கள் பிரிவில் சிறந்த வீரராக கோவை பீனிக்ஸ் அணியின் முத்தமிழ், மெஜஸ்டிக் அணியின் கருண் மற்றும் பெண்கள் பிரிவில் டைடன்ஸ் அணியின் ஜீவா கரூர் கே.டி.ஜி அணியின் கனிமொழி ஆகியோர் சிறந்த வீரர், வீராங்கனையினராக தேர்வு செய்யப்பட்டனர். வெற்றி பெற்றவர்களுக்கு நாகினி வித்யாலயா பள்ளியின் செயலாளர் திருமூர்த்தி, தமிழ்நாடு த்ரோபால் சங்க பொது செயலாளர் மணி, துணை தலைவர் ஸ்டீபன் தங்கராஜ், கோவை மாவட்ட த்ரோபால் சங்க தலைவர் விஸ்வனாதன், செயலாளர் செந்தில்மணி, ஒசூர் ஆக்ரிச் பள்ளி தாளாளர் சுமா ஆகியோர் பரிசு வழங்கினர்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement