Advertisement

தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் அழுத்தம் கொடுக்க வலியுறுத்தல் | Thoothukudi | Sterlite Plant

தமிழ்நாடு முறைசாரா தொழிலாளர் காங்கிரஸ் சார்பாக தொழிலாளர் வேலைவாய்ப்பு பற்றிய கருத்தரங்கம் தூத்துக்குடி அபிராமி மகாலில் நடைபெற்றது. அமைப்பு சாரா தொழிலாளர் சங்க தலைவர் பிஜி பால்ராஜ் தலைமையில் நடந்தது. தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட் தாமரை தொழிற்சாலையை அரசு மூடியதால் மாவட்டம் முழுவதும் 2000 க்கு மேற்பட்ட தொழிலாளர்கள் நேரடியாகவும், 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தினக்கூலி தொழிலாளர்கள், குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். தமிழக அரசு விரைந்து உச்சநீதிமன்றத்தில் அழுத்தம் கொடுத்து 5 ஆண்டுகளாக மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை காலம் தாழ்த்தாது திறக்க அரசு ஆவணம் செய்ய வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement