Advertisement

மாற்றுத்திறனாளிகள் தின மாரத்தான் | sports

கோவை சகாய் அறக்கட்டளை நிறுவனர் டாக்டர் தாமஸ் ஜோசப் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான சக்கர நாற்காலி மராத்தான் விழிப்புணர்வு ஊர்வலம் ரேஸ்கோர்ஸ் சாலையில் துவங்கியது. போக்குவரத்து துணை கமிஷனர் ராஜராஜன் துவக்கி வைத்தார். சக்கர நாற்காலிகளில் வீட்டில் முடங்கிய மாற்றுத்திறனாளிகளை வெளியில் கொண்டு வரும் நோக்கில் மாற்றுத்திறனாளிகள் தினம் கொண்டாடப்பட்டது. இதில் பல்வேறு மாநிலங்களில் இருந்து, சக்கர நாற்காலி பயன்படுத்தும் மாற்றுத்திறனாளிகள் 150 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். ரேஸ்கோர்ஸ் சாலையை சுற்றி இரண்டு முறை அதாவது 5 கிலோ மீட்டர் துாரம் செல்ல வேண்டும். இதில் மாற்றுத்திறனாளிகள் ஆர்வமாக பங்கேற்றனர். இப்போட்டியில் முதல் மூன்று இடங்களை பெற்ற, ஆண், பெண் பிரிவினருக்கு ரொக்கப் பரிசு வழங்கப்பட்டன.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement