Advertisement

ஃபேஷன் ேஷாவில் ஆண்கள், பெண்கள் கலக்கல் | Fation show

கோவை சின்னியம்பாளையம் ஸ்டார் ஹோட்டலில் ஃபேஷன் ஸ்பெக்ட்ரா 2023 ஃபேஷன் ஷோ நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான ஆண்கள் பெண்கள் கலந்து கொண்டனர். அழகழகான ஆடைகளில் தோன்றிய மாடல்கள் ஒய்யார நடை நடந்து பார்வையாளர்களை அசத்தினர். இதில் ஃபேஷ் பியூட்டிஷியன்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. ஃபேஷன் ஷோ நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவ மாணவிகள் கூறுகையில் இந்நிகழ்ச்சியில் வயது வரம்பு இன்றி குழந்தைகள் முதல் முதியோர் வரை கலந்து கொண்டனர். தங்கள் உடல் பாவனங்களை வெளிப்படுத்தும் விதமாக ஃபேஷன் ஷோ நடைபெற்றது என்றனர். ஃபேஷன் மாடல்கள் கூறுகையில் திருமணமான பெண்கள, உடல் நிறம் மற்றும் உடல் பருமன் வேறுபாடின்றி அனைவரும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். பாரம்பரிய கலாச்சார உடைகள் அணிந்தும் கலந்து கொள்ளலாம் என்றனர். இதுபோன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்றதன் பயனாக எந்தெந்த விழாக்களில் எந்தெந்த ஆடை அணியலாம் எனவும் ஆடை வடிவமைப்பு மற்றும் செய்கைகள் பற்றி தெரிந்து கொள்ள முடிந்தது என பார்வையாளர்கள் கூறினர்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement