Advertisement

மிக்ஜாம் புயல் எதிரொலி! செம்பரம்பாக்கம் ஏரியில் மீண்டும் 3,000 கனஅடி நீர் திறப்பு | chembarambakkam

சென்னையின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் செம்பரம்பாக்கம் ஏரி சமீபத்தில் முழு கொள்ளளவை எட்டியது. வினாடிக்கு 3000 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்ட நிலையில், நீர்வரத்து குறைந்ததால் திறக்கும் நீரின் அளவு 1500 கனஅடியாக குறைக்கப்பட்டது. இப்போது புயலின் தாக்கத்தால் மீண்டும் மழை பெய்கிறது. நீர்வரத்து வினாடிக்கு 2800 கன அடியாக உயர்ந்துள்ளது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரிக்கும் அபாயம் இருப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உபரி திறப்பு வினாடிக்கு 3000 கனஅடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த அளவை இன்னும் உயர்த்துவது குறித்து அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர். கரையோர மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தி உள்ளனர்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement