Advertisement

வடசென்னிமலை அரசு கல்லுாரியில் தேர்ச்சி விகிதம் சரிவு | Lack of professors

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே வடசென்னிமலையில் அண்ணாதுரை அரசு கலைக் கல்லூரி உள்ளது. பொன் விழா கண்ட இக்கல்லுாரியில் இளங்கலை, முதுகலை, எம்.பில். மற்றும் பிஹெச்.டி. என 2,899 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். உடல் கல்வி இயக்குனர் ஒருவர் மட்டுமே உள்ளார். பெண் உடல் கல்வி இயக்குனர் இல்லாததால் விளையாட்டில் மாணவிகள் ஆர்வலம் காட்டவில்லை. கல்லுாரி முதல்வர் பதவி உயர்வில் சென்றார். நுாலகர் பதவியிடம் உட்பட 69 பேராசிரியர்கள் பணியிடம் காலியாக உள்ளது. ஆங்கிலம் உள்ளிட்ட முக்கிய பாடங்களுக்கு பேராசிரியர்கள் பற்றாக்குறை தொடர்வதால் பருவத் தேர்வுகளில் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறைந்து வருகிறது. எம்.பில். மற்றும் பிஹெச்.டி. பாடப் பிரிவுகளிலு்ம் பேராசிரியர் பற்றாக்குறையால் ஆராய்ச்சி மாணவர்களின் கல்வி கேள்விக்குறியாகி வருகிறது. பாடப்பிரிவு, மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பேராசிரியர் பணியிடம் ஒதுக்கீடு செய்யவில்லை. 105 பேராசிரியர்கள் பணியிடம் இருந்தபோதும் 36 பேர் மட்டுமே உள்ளனர். மாணவர்கள் நலன் கருதி பேராசிரியர் பணியிடங்களை உடனே நிரப்ப உயர் கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் வலியுறுத்தினர்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement