Advertisement

நீரிலும், நிலத்திலும் செல்லும் ஹோவர் கிராப்ட் கோவையில் தயாரிப்பு!

உலகில் எல்லா வாகனமும் எல்லா இடங்களிலும் செல்ல முடியாது. ஆனால் நிலம், நீர், பனிப்பாறை,சேறு ஆகிய அனைத்து இடங்களிலும் செல்லும் ஒரே வாகனம் ஹோவர் கிராப்ட் என்ற காற்றுமெத்தை உந்து வாகனம். காற்றுமெத்தை உந்து அல்லது காற்றுமெத்தை ஊர்தி என்ற ஹோவர் கிராப்ட் வாகனம் பொதுவாக நிலம், நீர் ஆகிய இருபரப்புகளிலும், அதிக மேடுபள்ளம் இல்லாமல் ஓரளவுக்குச் சமமாக இருக்கும் பொழுது, காற்றை கீழ்நோக்கி அழுத்தத்துடன் செலுத்தி முன்னே செல்லும் ஓர் ஊர்தி ஆகும். ஹோவர் கிராப்ட் கீழ் பகுதியில் அதிக அழுத்தத்தில் செலுத்தப்படும் காற்று அதை பூமி மட்டத்திலிருந்து சில அங்குலம் உயரத்துக்கு துாக்கி நிறுத்தும். இது நீரிலும், நிலத்திலும் மிதந்து செல்லும் என்றே சொல்லலாம். இந்த ஊர்தி கடற்படை, ராணுவம், தேசிய பேரிடர் மீட்புத் துறைகளில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. தற்போது ஹோவர் கிராப்டுகள் வெளிநாடுகளிலிருந்து தான் இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன. ஆனால் தற்போது இந்தியாவிலேயே முதன்முறையாக கோவையை அடுத்த சூலூாரில் இவை தயாரிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. யூரோ டெக் பிவோட் சொல்யூசன்ஸ் பிரைவேட் நிறுவனம் சார்பில் பிவோட் கிராப்ட் என்ற பெயரில் காற்றுமெத்தை ஊர்தி என்ற கிராப்ட் தயாரிக்கப்படுகிறது. அது பற்றிய ஒரு வீடியோ தொகுப்பை காணலாம்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement