Advertisement

சகோதயா ஸ்கூல் காம்பிளக்ஸ் 7ம் ஆண்டு தடகளப் போட்டி

கோவை சகோதயா ஸ்கூல் காம்பிளக்ஸ் சார்பாக 7 ம் ஆண்டு தடகளப் போட்டிகள் நடைபெற்றன. இதில் 8 மற்றும் 10 வயதுக்கு உட்பட்டோருக்கு கிட்டீஸ் மீட் என்ற பெயரில் 100 மீட்டர், 200 மீட்டர், 400 மீட்டர், தடைதாண்டும் ஓட்டம், தொடர்ஓட்டம், நீளம் தாண்டுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. இப்போட்டிகளில் 27 பள்ளிகளை சேர்ந்த சுமார் 600 மாணவ, மாணவியர் பங்கேற்றனர். 8 வயதிற்கு உட்பட்ட சாப்ட் பால் போட்டியில் பி.எஸ்.ஜி. பப்ளிக் பள்ளி ஹர்ஷினி முதலிடம் பெற்றார். வெள்ளாளர் வித்யாலயா பள்ளி நட்சத்திரா இரண்டாமிடம் மற்றும் பி.எஸ்.ஜி. பப்ளிக் பள்ளி மியா லுவேஷா மூன்றாமிடம் பெற்றனர். நீளம் தாண்டுதல் போட்டியில் எல்.ஜி. பள்ளி ஸ்வரன் ராஜ் முதலிடம் பெற்றார். ஸ்மார்ட் மார்டன் பள்ளி நீர்மித் உதிப் இரண்டாமிடம் மற்றும் கண்ணம்மாள் நேஷனல் பள்ளி மாஹிர் அகமத் மூன்றாமிடம் பெற்றனர். 10 வயதிற்கு உட்பட்ட மாணவர்கள் குண்டு எறிதல் போட்டியில் பி.எஸ்.ஜி. பள்ளி நகுல் முதலிடம் பெற்றார். அதே பள்ளியின் சாய் கிருஷ்ணா இரண்டாமிடம் மற்றும் நேவி குழந்தை பள்ளி பால ஆதித்யா மூன்றாமிடம் பெற்றனர். மாணவியர் குண்டு எறிதல் போட்டியில் விவேகானந்தா அகாடமி ஆதிரா ஸ்ரீ முதலிடம் பெற்றார். கேம்போர்ட்டு பள்ளி சாம்பவி இரண்டாமிடம் மற்றும் பி.எஸ்.ஜி. பப்ளிக் பள்ளி தனுஸ்ரீ மூன்றாமிடம் பெற்றனர். உயரம் தாண்டுதலில் சாகர் பன்னாட்டு பள்ளி நித்திஷ் குமார் முதலிடம் பெற்றார். நேவி குழந்தை பள்ளி ஹர்ஷவர்த்தன் இரண்டாமிடம் மற்றும் கேம்போர்டு பள்ளி வருண் சாஸ்திக் மூன்றாமிடம் பெற்றனர். மாணவியர் நீளம் தாண்டுதல் போட்டியில் ஸ்மார்ட் மார்டன் பள்ளி ஆருத்ரா முதலிடம் பெற்றார். சாகர் பன்னாட்டு பள்ளி அனன்யா இரண்டாமிடம் மற்றும் விவேகானந்தா அகாடமி பள்ளி தர்ஷனா மூன்றாமிடம் பெற்றனர்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement