Advertisement

பந்தலுார் தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி நடவடிக்கை | confiscation of polythene covers

நீலகிரி மாவட்டம் பந்தலூர் சுற்று வட்டார பகுதிகளில் பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்தும் வகையில் பந்தலூர் தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான வருவாய்த்துறையினர் உப்பட்டி பஜார் பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது மளிகை, பேக்கரி உள்ளிட்ட கடைகளில் பாலிதீன் கவர்கள் பயன்படுத்தியது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்தனர். கடை உரிமையாளர்களிடம் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது. பாலிதீன் கவர்களுக்கு பதிலாக மக்கும் தன்மை கொண்ட கவர்களை பயன்படுத்த அறிவுரை வழங்கினர்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement