Advertisement

வாலிபால் போட்டி 30 அணிகள் பங்கேற்பு

எஸ்.என்.எஸ் கல்வி குழுமத்தின் 'ஸ்பைன்' மையம் சார்பில், 19 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவ, மாணவியருக்கான வாலிபால் போட்டி சரவணம்பட்டி, எஸ்.என்.எஸ். இன்ஜினியரிங் கல்லுாரி வளாகத்தில் துவங்கியது. போட்டியை எஸ்.என்.எஸ்., கல்வி குழும இயக்குனர் அருணாச்சலம், முதல்வர் சார்லஸ் ஆகியோர் துவக்கி வைத்தனர். மாணவர் மற்றும் மாணவியர் பிரிவுகளில் 30 அணிகள் பங்கேற்றன. மாணவர் பிரிவு நாக் அவுட் சுற்றுப்போட்டியில், தடாகம் அரசு பள்ளி அணி 2 - 1 என்ற செட் கணக்கில் தர்மசாஸ்தா பள்ளி அணியையும், அகர்வால் பள்ளி அணி 2 - 0 என்ற நேர் செட் கணக்கில் குளத்துப்பாளையம் அரசு பள்ளி அணியையும் வீழ்த்தின. மாணவியர் பிரிவில், தடாகம் அரசு பள்ளி அணி 2 - 1 என்ற செட் கணக்கில் பி.எஸ்.ஜி.ஜி., கன்யா குருகுலம் பள்ளி அணியையும், இருகூர் அரசு பள்ளி அணி 2 - 0 என்ற நேர் செட் கணக்கில் காரமடை எஸ்.வி.ஜி.வி., பள்ளி அணியையும் வீழ்த்தின.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement