Advertisement

மனநலம் பாதித்த சிறுமி பலாத்காரம் தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கெங்குவார்பட்டியைச் சேர்ந்தவர் ராஜா. கூலி தொழிலாளி. கடந்த 2020 நவம்பர் 11 ம் தேதி பக்கத்து வீட்டில் வசித்த மனநலம் பாதித்த 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தார். அவர் மீது சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் கூறினர். விசாரணைக்கு பின் ராஜா போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். இவ்வழக்கு தேனி போக்சோ சிறப்பு கோர்ட்டில் நடைபெற்றது. ராஜா மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டது. அவருக்கு 20 ஆண்டு கடுங்காவல், 10 ஆயிரம் ரூபாய் அபராம், அதைக் கட்ட தவறினால் மேலும் இரண்டு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை வழங்கி கோர்ட் உத்தரவிட்டது.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement