Advertisement

பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்ட போலீஸ் அருங்காட்சியகம்!

ஹேமில்டன் கிளப் என்று அழைக்கப்படும் போலீஸ் அருங்காட்சியகம் கோவை ரயில் நிலையம் எதிரில் அமைந்துள்ளது. இந்த இடத்தை ஹேமில்டன் என்ற ஆங்கிலேய போலீஸ் அதிகாரி 1918-ம் ஆண்டு வெறும் 20 ஆயிரம் ரூபாய்க்கு விலைக்கு வாங்கியுள்ளார். அதன் பின்னர் 1928-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15-ம் தேதி அது போலீஸ் கிளப் ஆக மாற்றப்பட்டு சப்-இன்ஸ்பெக்டர் அந்தஸ்து உள்ள போலீஸ் அதிகாரிகள் தங்குமிடமானது. இந்த கட்டிடத்தின் கூரை காற்றோட்ட வசதிக்காக 12 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. பெரிய ஜன்னல்கள், ஒரு மீட்டர் அகலத்தில் இதன் சுவர்கள் அமைக்கப்பட்டுள்ளது. நுாற்றாண்டு பழமை வாய்ந்த இந்த போலீஸ் அருங்காட்சியகம் முந்தைய கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் மேற்பார்வையில் பழமை மாறாமல், பாரம்பரிய முறையில் புதுப்பிக்கப்பட்டுள்ளது குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement