Advertisement

ஏசி வென்டிலேட்டர் வழியாக உள்ளே புகுந்து கைவரிசை | Jewelry shop ropped of 200 | covai

கோவை 100 அடி ரோட்டில் ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடை உள்ளது. ஊழியர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் நகைகளை ஆய்வு செய்தனர். அப்போது 200 பவுன் நகைகள் மாயமாகி இருப்பது தெரிந்தது. இதுகுறித்து காட்டூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விசாரணை நடத்தினர். கடையில் இருந்த சிசிடிவி கேமிரா காட்சிகளை ஆய்வு செய்ததில் மர்மநபர் ஒருவர் கடைக்குள் புகுந்து நகைகளை திருடிச் செல்வது பதிவாகி இருந்தது. நகைக்கடையின் ஏ.சி. வென்டிலேட்டர் வழியாக உள்ளே புகுந்து கொள்ளையன் கைவரிசை காட்டியது தெரியவந்தது. தனிப்படை அமைத்து கொள்ளையனை போலீசார் தேடுகின்றனர்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement