Advertisement

முதுமலையில் வன விலங்குகள் கணக்கெடுப்பு | wildlife census mission | Muthumalai

நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் பகுதிகளில் பருவ மழைக்கு பிந்தைய வனவிலங்கு கணக்கெடுப்பு பணிகள் கடந்த 16ம் தேதி துவங்கி இரண்டு கட்டமாக நடந்து, இன்று நிறைவு பெற்றது. தொடர்ந்து முதுமலை உள்வட்ட வனப்பகுதிகளில் ஆட்டோமேட்டிக் கேமராக்கள் பொருத்தி புலிகள் மற்றும் மாமிச உண்ணிகள் குறித்த கணக்கெடுப்பு பணிகளை வனத்துறையினர் இன்று துவக்கினர். இதற்காக நெலக்கோட்டை, முதுமலை, கார்க்குடி, தெப்பக்காடு, மசினகுடி வனச்சரகங்களில் ஆட்டோமேட்டிக் கேமிராக்களை பொருத்தி அதன் செயல்பாடுகளை வன ஊழியர்கள் சோதனை செய்யும் பணியில் ஈடுபட்டனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், 'முதுமலையில், புலிகள் மற்றும் மாமிச ஊண்ணிகள் கணக்கெடுப்பு பணிக்காக 191 இடங்களில் தலா இரண்டு வீதம் 382 ஆட்டோமேட்டிக் கேமராக்கள் பொருத்தும் பணி இன்று துவங்கிய 5 நாட்கள் நடைபெறும். தொடர்ந்து, 30 நாட்கள் கேமராவில் பதிவாகும் புலி உள்ளிட்ட மாமிச உண்ணிகளின் படங்கள் பதிவிறக்கம் செய்து கணக்கிடும் பணி மேற்கொள்ளப்படும்' என்றனர்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement