Advertisement

தென் கொரியாவிற்கு சாதனை பயணம் | scientific invention | student achievement

அரசு பள்ளிகளில் ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கான வானவில் மன்றம் செயல்படுகிறது. இதன் மூலம் மாணவர்களின் பல்வேறு திறமைகள் வெளிக்கொண்டுவர முயற்சிகள் நடக்கிறது. இதில் நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே பிதர்காடு அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர் அஜ்மல், தனது அறிவியல் கண்டுபிடிப்பை மாவட்ட அளவிலும், மண்டல அளவிலும் சமர்ப்பித்து வெற்றி பெற்று மாநில அளவில் தேர்ச்சி பெற்றார். இவர் உந்துவிசை மூலம் தண்ணீரை மலை முகடுகளுக்கு எடுத்துச் செல்லும் கருவியை கண்டுபிடித்து சாதனை படைத்தார். நீலகிரி மாவட்ட அளவில் தேர்ச்சி பெற்ற ஒரே மாணவர் என்ற பெருமையை பெற்ற இவர், தமிழகத்தில் தேர்வு செய்யப்பட்ட 25 மாணவர்களுடன் இணைந்து தமிழக அரசு மூலம் தென்கொரியா அழைத்துச் செல்லப்பட்டார். தென்கொரியா சென்று திரும்பிய மாணவர் அஜ்மலுக்கு தலைமை ஆசிரியை மீரா தலைமையில் ஆசிரியர் மற்றும் பெற்றோர் பாராட்டு தெரிவித்தனர்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement