Advertisement

திருவொற்றியூர் கோயிலில் வசதி இன்றி பக்தர்கள் தவிப்பு! அறநிலையத்துறை மீது பாய்ச்சல் | thiruvottiyur

திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி வடிவுடையம்மன் கோயிலில் சுயம்புலிங்கமாக வீற்றிருக்கும் ஆதிபுரீஸ்வரர் வெள்ளிக்கவசம் ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டது. ஞாயிறு முதல் செவ்வாய் வரை 3 நாட்கள் மட்டுமே கவசம் திறந்த நிலையில் ஆதிபுரீஸ்வரர் காட்சி அளிப்பார் என்பதால் பக்தர் கூட்டம் அலைமோதியது. கடைசி நாளான இன்றும் பக்தர்கள் குவிந்தனர். ஆண்டில் 3 நாட்கள் மட்டுமே நடக்கும் இந்த நிகழ்வுக்கு கூட குடிநீர், கழிவறை உள்ளிட்ட எந்த அடிப்படை வசதியும் அறநிலையத்துறை செய்து தரவில்லை. நெரிசலில் சிக்கி யாருக்காவது உடல்நிலை பாதிக்கப்பட்டால் அவசரத்துக்கு அழைத்துச் செல்ல ஆம்புலன்சும் இல்லை என்று பக்தர்கள் குற்றம் சாட்டினர். அடுத்த ஆண்டாவது இந்த குறைகளை நீக்கி போதிய வசதி செய்து தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement