Advertisement

9 மாதங்களில் 265 தபால்கள்! பிரதமர் மோடிக்கு தினமும் கடிதம் எழுதிய கோவை பெண்...

கோவை பீளமேடு காந்திமாநகரை சேர்ந்தவர் கிருத்திகா பழனிசாமி. இல்லத்தரசியான இவர் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடந்த 9 மாதங்களில் 265 கடிதங்கள் எழுதியுள்ளார். அதன்படி தினமும் கடிதம் எழுதிய அவர் சமையல் கியாஸ் விலையை குறைக்க வேண்டும், பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் உள்பட பல பொது பிரச்னைகள் குறித்து தமிழில் கடிதங்கள் எழுதியுள்ளார். இதைத் தொடர்ந்து பிரதமர் அலுவலகத்தில் உள்ள குறை தீர்க்கும் பிரிவு அதிகாரிகள் கிருத்திகாவை தொடர்பு கொண்டு அவர் எழுதிய கடிதங்கள் கிடைத்தது குறித்தும், கடிதத்தில் குறிப்பிட்ட பிரச்னைகள் குறித்தும் கேட்டறிந்து நடவடிக்கை எடுத்துள்ளனர். தமிழகத்திலிருந்து பிரதமருக்கு தொடர்ந்து தமிழில் கடிதங்கள் எழுதி பிரச்னைகளுக்கு தீர்வு கண்டு வரும் கிருத்திகாவின் பேட்டி குறித்து இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement