Advertisement

கோவை மாநகராட்சியில் மண் அகற்றும் வாகனங்கள் செயல்படாமல் முடங்கியது | piles of mud road | covai

கோவை மாநகராட்சியில் 2 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்திற்கும் அதிகமான ரோடுகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. நகரின் பெரும்பாலான பகுதிகளில் பாதாளச் சாக்கடைக்காக ரோடுகள் தோண்டப்பட்டன. குழிகள் மீது மண்ணை கொட்டி தற்காலிகமாக மூடினர். நகரில் எங்கு பார்த்தாலும் ரோடுகள் குண்டும் குழியுமாக மாறி விட்டன. வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். காற்றில் பறக்கும் துாசி வாகன ஓட்டிகளின் கண்களை பதம் பார்க்கிறது. ரோட்டோரம் தேங்கும் குப்பைகள் மற்றும் மண் குவியல்களை அகற்ற கடந்த மார்ச் மாதம் மாநகராட்சி 2 தானியங்கி வாகனங்களை வாங்கியது. முறையாக செயல்படாத காரணத்தால் முடங்கி கிடக்கிறது. ரோடுகளில் அள்ளப்படாத மண் அதிகளவில் குவிந்துள்ளன. வாகன ஓட்டிகள் நலன் கருதி மண் குவியல்களை அகற்ற மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement