Advertisement

சக்கர ஏணியை தள்ளிய போது சோகம்! ஒருவர் பலி; அப்பா, மகன் அட்மிட் | Chengalpattu

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியை சேர்ந்தவர் அழகேசன் வயது 50. இவரது மகன் கார்த்திக் வயது 25. இவர்களது உறவினர் பிரதாப் வயது 23. 3 பெரும் வடபழனியில் தங்கி இருந்து விளம்பர பலகை அமைக்கும் தொழில் செய்து வந்தனர். வண்டலூர் டு கேளம்பாக்கம் ரோட்டில் உள்ள ரத்தினமங்கலம் பகுதியில் விளம்பர பலகை அமைத்து வந்தனர். 4 சக்கர உயர் கோபுர ஏணியை 3 பேரும் தள்ளி சென்றனர். எதிர்பாராத விதமாக உயர் அழுத்த மின் கம்பியில் ஏணி உரசியது. 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். பிரதாப் சம்பவ இடத்திலேயே இறந்தார். அழகேசன், அவரது மகன் கார்த்திக் படுகாயம் அடைந்தனர். உள்ளூர் மருத்துவமனையில் முதல் கட்ட சிகிச்சை பெற்றனர். மேல்சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். போலீசார் விசாரிக்கின்றனர்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement