Advertisement

தினமலர் செய்தி எதிரொலி; அதிகாரிகள் ஆய்வு. | Damage to betel nut | Agricultural Officers Survey | Pud

புதுச்சேரியில் சேந்தநத்தம், வில்லியனூர், பொறையூர் உட்பட பல பகுதிகளில் வெற்றிலை விளைவிக்கப்படுகிறது. வெற்றிலையில் சப்பாத்தி பூச்சி, பூஞ்சான் கொல்லி நோய் தாக்கி வெற்றிலை விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தினமலர் செய்தி வெளியிட்டது. இதன் எதிரொலியாக விவசாய அமைச்சர் தேனீ ஜெயக்குமார் உத்தரவின் பேரில் கூடுதல் வேளாண்மை இயக்குனர் சிவராமன் தலைமையில் காமராஜர் வேளாண் அறிவியல் நிலைய பூச்சிகள் வல்லுனர் விஜயகுமார் மற்றும் வில்லியனூர் தொண்டமாநத்தம் அலுவலர்கள் உமாராணி, சங்கரதாஸ் ஆகியோர் வெற்றிலை தோட்டங்களை ஆய்வு செய்தனர். வெற்றிலையை தாக்கும் பூச்சிக்கொல்லி நோய் தாக்குதலை தடுக்க பயிற்சி அளிப்பதாகவும், வெற்றிலையை தாக்கும் பூச்சிகளை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாயிகளிடம் அதிகாரிகள் உறுதி அளித்தனர். வெற்றிலை விவசாயிகள் வாழ்வாதாரம் கருதி முதல்வரிடம் பேசி உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் உறுதி அளித்தனர்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement