Advertisement

21 ஆயிரத்து 500 மலர் தொட்டிகளில் 4 லட்சத்து 50 ஆயிரம் மலர்கள் | Nilgiris | Botanical Garden | Flower

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் அரசு தாவரவியல் பூங்காவில் இரண்டாவது சீசன் தொடக்க விழா கோலாகலமாக நடந்தது. சுற்றுலா அமைச்சர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார். சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் தாவரவியல் பூங்காவில் 4 லட்சம் மலர் செடிகளால் மலர்பாத்திகள் அமைக்கப்பட்டுள்ளன. 70 வகை மலர் செடிகளான டேலியா, சால்வியா, டெய்சி, பால்சம் போன்ற 21 ஆயிரத்து 500 மலர் தொட்டிகள் மற்றும் புல்வெளியில் சந்திராயன்-3 விண்கல மாதிரி அமைக்கப்பட்டுள்ளது. 2 லட்சத்து 70 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. நிகழ்ச்சியில் கலெக்டர் அருணா, எம்எல்ஏ கணேஷ் மற்றும் அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement