Advertisement

தமிழக எல்லையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கன்னடர்கள் கைது | Krishnagiri | Coimbatore | Arrested | Ban

காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கன்னட அமைப்பினர் கர்நாடக மாநிலம் முழுவதும் ஒரு நாள் பந்த் அறிவித்துள்ளனர். இதையடுத்து தமிழகம் டு கர்நாடகா எல்லைகளில் உள்ள சோதனை சாவடிகள் அடைக்கப்பட்டன. மாலை 6 மணி வரை அனுமதி இல்லை என போலீசார் போர்டு வைத்தனர். அதே போல் கர்நாடக தமிழக எல்லைப்பகுதியான புளிஞ்சூர் சோதனை சாவடியில் கர்நாடக மாநில போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சாம்ராஜ்நகர் கலெக்டர் ஷில்பா நாக் புளிஞ்சூர் சோதனை சாவடிக்கு வந்து பாதுகாப்பு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். கர்நாடகா மாநில எல்லையான அத்திப்பள்ளியில் கன்னட ஜாக்ருதி வேதிகே அமைப்பினர் மாநிலத் தலைவர் மஞ்சுநாத் தேவா தலைமையில் காவேரி மேலாண்மை ஆணையத்தை கண்டித்து கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களை கைது செய்தனர்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement