Advertisement

ஷோரூம் ஊழியர் முன் Yamaha R15 பைக்கில் சாவி போட்டு சிட்டா பறந்த கொள்ளையன் | பரபரப்பு CCTV காட்சி

அரியலூரில் பைக் வாங்குவது போல் ேஷாரூம் வந்த ஆசாமி, விலை உயர்ந்த ஒரு பைக்கை ஆட்டைய போட்டு மாட்டிக்கொண்டான். முற்றிலும் வித்தியாசமான முறையில் நடந்த இந்த திருட்டு சம்பவம் விரிவாக பற்றி பார்க்கலாம். அரியலூர் கலெக்டர் ஆபீஸ் அருகே வெங்கடேசன் என்பவருக்கு சொந்தமான யமஹா ேஷாரூம் உள்ளது. பகல் நேரத்தில் கலர் வேட்டி, டீசர்ட் அணிந்த ஆசாமி ஒருவன் வந்தான். வாசலில் ஏறி வரும் போது நல்ல பிள்ளை போல் படிகளை தொட்டு கும்பிட்டுக் கொண்டான். கையில் வைத்திருந்த துண்டை தலைப்பாகையாக கட்டியபடி வாசலில் நுழைந்தான். வாசல் நேரே ேஷாரூமில் நிறுத்தி இருந்த R15 வகை யமஹா பைக்கை நோக்கி வேகமாக நடந்தான். அங்கிருந்த பெண் விற்பனையாளர்களிடம் எதுவும் சொல்லவில்லை; கேட்கவும் இல்லை. வந்த வேகத்தில் பைக் மீது காலை தூக்கிப்போட்டான். பிறகு தனது சித்து வேலையை ஆரம்பித்தான். 'சாவி கிடைக்குமா? வண்டியை ஸ்டார்ட் செய்து பார்க்க வேண்டும்? ஆக்சிலேட்டரை திருக்கி வண்டியின் இரைச்சல் சத்தத்தையும் கேட்க வேண்டும்' என்றான். அப்பாவி போல் இருந்ததால் அவன் மீது எள் அளவும் ஊழியர்களுக்கு சந்தேகம் வரவில்லை. ஆசாமி கேட்டதுமே சாவியை நீட்டினர். அவன் வண்டியில் சாவியை போட்டு பட்டனை அழுத்தி ஸ்டார்ட் செய்தான். எந்த சலனமும் இன்றி பைக்கை ஓட்டினான். வாசல் படிக்கட்டுகள் வழியே பைக் பறந்தது. மறு கணமே ரோட்டை அடைந்து மறைந்தது. ேஷாரூம் ஊழியர்களுக்கு தூக்கி வாரிப்போட்டது. சில நிமிடங்கள் அதிர்ச்சியில் உறைந்து அப்படியே நின்றனர். 'வண்டியை ஸ்டார்ட் செய்கிறேன் என்று தானே கேட்டார். இப்படி திருடிக்கொண்டு போய் விட்டாரே' என்று திகைத்தனர். உடனே போலீசுக்கு போன் போட்டு நடந்ததை கூறினர். பைக் அடையாளம், ஆசாமி அடையாளத்தை போலீசார் குறித்துக்கொண்டனர். அடுத்த நிமிடம், மாவட்டம் முழுவதும் உள்ள போலீசாருக்கு மைக்கில் தகவல் போனது. நாலாபுறம் இருந்த போலீசாரும் உஷாராகினர். மணகெதி என்ற கிராமம் அருகே களவு பைக்கில் ஹாயாக சென்று கொண்டு இருந்தான் ஆசாமி. விரட்டி சென்ற போலீசார் அவனை ரோட்டிலேயே சுற்றி வளைத்தனர். இந்த இடம் திருட்டு நடந்த ேஷாரூமில் இருந்து 12 கிலோ மீட்ட தூரத்தில் உள்ளது. ஆசாமியை மடக்கி பிடித்து தங்கள் பாணியில் விசாரித்தனர். அவனது பெயர் பால் கண்ணன் வயது 35 என்பது தெரிந்தது. ஊர் காஞ்சிபுரம். ஏற்கனவே சில திருட்டுகளில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. அவனை கைது செய்த போலீசார் பைக்கை மீட்டனர். பைக்கின் விலை 2 லட்சம் ரூபாக்கும் அதிகம் என்றனர். அவன் ேஷாரூமில் சாமி கும்பிட்டு நுழைவது முதல் பைக்குடன் படிக்கட்டுகளில் தாறுமாறாக இறங்கி தப்பி ஓடும் காட்சி வரை சிசிடிவியில் பதிவாகி இருந்தது. அந்த காட்சி இப்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement