Advertisement

லஞ்சம் வாங்கியபோது கையும் களவுமாக கைது | 2 persons including VAO arrested | ₹.10,000 bribe | Vellor

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த அக்ராவரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மேகநாதன். இவர் வீட்டுமனை பட்டா மாற்ற விஏஓவிடம் மனு அளித்தார். பட்டா மாற்றம் செய்ய விஏஓ ஜெயமுருகன் மற்றும் உதவியாளர் தேன்மொழி ஆகியோர் ம் மேகநாதனிடம் 10,000 ரூபாய் லஞ்சம் கேட்டனர். லஞ்சம் தர விரும்பாத மேகநாதன் வேலூர் லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி சங்கரிடம் புகார் அளித்தார். போலீசார் ரசாயனம் தடவிய 10,000 ரூபாயை மேகநாதனிடம் கொடுத்து அனுப்பினர். லஞ்சப் பணத்தை விஏஓ வேல்முருகன் மற்றும் உதவியாளர் தேன்மொழியிடம் மேகநாதன் கொடுத்தார். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் இருவரையும் கைது செய்தனர். விசாரணை நடக்கிறது.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement