Advertisement

மழைநீர் வடிகாலில் சரக்கு வேன் கவிழ்ந்து ரோட்டில் முட்டை வெள்ளம் | egg van accident | chennai

சென்னை கொருக்குப்பேட்டையை சேர்ந்த பரமசிவம் என்பவர் முட்டை வியாபாரம் பார்க்கிறார். 10 ஆயிரம் முட்டைகளை மினி வேனில் எடுத்துக்கொண்டு மீனம்பாக்கம் புறப்பட்டார். அம்பேத்நகர் பகுதியில் மழைநீர் வடிகாலை கடக்க முயன்ற போது எதிர்பாராதவிதமாக மினி வேன் கவிழ்ந்தது. வண்டியில் இருந்த மொத்த முட்டை லோடும் சரிந்தது. ரோட்டில் முட்டை உடைந்து ஓடியது. அந்த பகுதியில் இருந்தவர்கள் பரமசிவத்துக்கு உதவினர். 7 ஆயிரம் முட்டை உடைந்து விட்டது. 3 ஆயிரம் முட்டைகளை உடையாமல் மீட்டனர்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement