Advertisement

வாழ்க்கையோடு ஒன்றி விட்ட ஓவியக் கலை

மற்ற நாடுகளை விட இந்தியாவில் பல வகையான ஓவியக் கலைகள் உள்ளன. இதற்கு காரணம் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு ஓவியம் புகழ் பெற்றது. ஆனால் வெளிநாடுகளில் குறிப்பிட்ட ஓவியங்களில் மட்டுமே கவனம் செலுத்துவார்கள். நம் நாட்டில் அப்படியில்லை. முன்பெல்லாம் ஓவியம் என்பது ஆடம்பரமானது என்று நினைத்தார்கள். ஆனால் இன்று ஓவியம் வாழ்க்கையோடு ஒன்றி விட்டது. வீட்டு சுவற்றில் மட்டுமல்லாமல் நாம் உடுத்தும் உடையில் கூட ஓவியங்களை பதிய வைக்கும் வகையில் ஓவியங்கள் வரையப்படுகின்றன. இன்றைய இளைஞர்கள் ஓவியத்தை கற்றுக் கொள்வதில் மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளனர். அவ்வாறு கற்றுக் கொண்டதை ஏதாவது ஒரு வகையில் பயன்படுத்தி வருமானம் ஈட்ட வேண்டும் என்று நினைக்கிறார்கள். என்னதான் டிஜிட்டல் மயம் என்றாலும் கையால் வரையும் ஓவியங்களுக்கு எப்போதும் வரவேற்பு உண்டு. அத்தகைய சிறப்பு மிக்க ஓவியம் குறித்து இந்த வீடியோ தொகுப்பு விளக்குகிறது.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement