Advertisement

தி.மலையில் குவிந்த பக்தர்கள் |Crowd of devotees | Thiruvannamalai Temple |

அண்ணாமலையார் கோயிலில் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய தினங்களில் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து வரும் பக்தர்களின் வருகை அதிகமாக உள்ளது. அண்ணாமலையாரை தரிசிக்க விடுமுறை தினங்களில் மக்கள் கூட்டம் கூடிக் கொண்டே செல்கிறது. நேற்று 3 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தார்கள். கோயில் சார்பில் பக்தர்களுக்கு ஆங்காங்கே தண்ணீர் வழங்கப்பட்டது. ஆணையர் ஜோதி உத்தரவின் பேரில் வெள்ளி சனி ஞாயிறு ஆகிய மூன்று தினங்களில் கருவறை உள்ளே அமர்ந்து தரிசனம் செய்ய அமர்வு தரிசனம் ரத்து செய்யப்பட்டது. அமர்வு தரிசனம் ரத்து செய்யப்பட்ட நிலையில் விடுமுறை தினங்களில் தமிழ்நாடு மற்றும் வெளி மாநில பக்தர்கள் அதிகம் பேர் விரைவாக சாமி தரிசனம் செய்தனர்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement