Advertisement

₹10 கோடி கால்வாயை அபகரித்த தொழிற்சாலை! ஊருக்குள் ஓடிய வெள்ளம்! களம் இறங்கிய கலெக்டர் | Thiruvallu

ருவள்ளூர் மாவட்டம் வெள்ளி வாயலில் உள்ள மழைநீர் கால்வாய் அறுமந்தை, விச்சூர், ஞாயிறு, திருநிலை கிராமங்கள் வழியாக கொசஸ்தலை ஆற்றில் சேர்கிறது. வெள்ளிவாயலில் இந்த கால்வாயின் இருபுறமும் ஒரு தொழிற்சாலை உள்ளது. கால்வாய் மற்றும் சுற்றியுள்ள புறம்போக்கு நிலம் 5 ஏக்கரை தொழிற்சாலை வளைத்தது. கால்வாயில் கற்களை கொட்டி ஆக்கிரமித்தது. கால்வாயை முற்றிலும் மூடியதால் கடந்த முறை பருவமழையின் போது வெள்ளம் ஊருக்குள் புகுந்து மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அன்று முதல் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் நடவடிக்கை இல்லை. இந்த நிலையில் வெள்ளி வாயல் ஊராட்சி மக்கள் கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீசை சந்தித்து மனு கொடுத்தனர். அவர் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். உடனே பொன்னேரி சப்கலெக்டர் ஐஸ்வர்யா கால்வாயை பார்வையிட்டார். தாசில்தார், சர்வேயர், விஏஓக்கள் மூலம் நிலத்தை அளந்து ஆக்கிரிமிப்பை மீட்டார். கால்வாயில் கொட்டிய கற்களை அப்புறப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மீட்ட நிலத்தின் மதிப்பு 10 கோடி ரூபாய்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement