Advertisement

தலையாறு அருவி எழில் காட்சி | கொடைக்கானல் டூரிஸ்ட் கொண்டாட்டம் | Thalaiyar water falls | Kodaikanal

கொடைக்கானல் கீழ்மலையில் உள்ள பெருமாள் மலை, சாமக்காடு, பாலமலை உள்ளிட்ட பகுதிகளில் சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் வறண்டு கிடந்த தலையாறு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. 975 அடி உயரம் கொண்ட இந்த அருவியின் எழில் காட்சியை கொடைக்கானல் செல்லும் வழியில் டம்டம் பாறையில் இருந்து சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் ரசிக்கின்றனர். கொடைக்கானல் கீழ் மலையில் பெய்த தொடர் மழையால் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவிக்கும் நீர் வரத்து அதிகரித்தது. நேற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இன்றும் அனுமதி கிடைக்கவில்லை.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement