Advertisement

₹300 கோடி சுருட்டிய சாய் கிரிப்டோ நிறுவனம்! ஏஜென்ட்கள் பகீர் | sri sai crypto consultancy issue

கும்பகோணத்தை தலைமையிடமாக கொண்டு அர்ஜுன் கார்த்திக் என்பவர் ஸ்ரீ சாய் கிரிப்டோ கன்சல்டன்சி என்ற நிதி நிறுவனத்தை துவங்கினார். ஒரு லட்சம் முதலீடு செய்தால் 18 மாதங்களுக்கு தலா 15,000 வட்டி கிடைக்கும். முடிவில் அசல் பணம் தரப்படும் என்பது போன்று பல கவர்ச்சி திட்டங்களை நிறுவனம் அறிவித்தது. இதை நம்பி பலர் முதலீடு செய்தனர். முதலீட்டாளர்கள், நிறுவனத்தை இணைக்கும் பாலமாக ஏஜென்ட்களும் இருந்தனர். 10 மாதங்களில் கிடைத்த பணத்தை சுருட்டிய நிறுவனம் மோசடி செய்தது. முதலீட்டாளர்களும், ஏஜென்ட்களும் ஏமாற்றப்பட்டனர். நிறுவனம் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தர வேண்டும் என்று திருச்சி ஐஜி கார்த்திகேயனிடம் நிறுவன ஏஜென்ட்கள் புகார் மனு அளித்தனர். செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள் 300 கோடி ரூபாய் வரை மோசடி நடந்ததாக கூறினர்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement