Advertisement

போலீஸ் கவனத்தை ஈர்க்க விழா குழுவின் ஏற்பாடா என விசாரணை | Namakkal | Ganesha Chaturthi | Police investigation

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் பல்வேறு இடங்களில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளது. எட்டிமடைபுதூர், நெசவாளர் காலணியில் வைக்கப்பட்ட சிறிய அளவிலான மூன்று சிலைகள் அனுமதியின்றி வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. சிலை வைக்கப்பட்ட பகுதியில் நள்ளிரவு மங்கி குல்லா அணிந்த வந்த மூன்று இளைஞர்கள் விநாயகர் சிலையை பைக்கில் திருடி சென்றனர். இது தொடர்பான சிசிடிவி காட்சி வெளியானது. காணமல் போன விநாயகர் சிலை குறித்து விழா குழுவினர் போலீசில் புகார் கூறவில்லை. இரண்டு சிலைகள் மட்டும் புதிய பஸ் ஸ்டாண்ட்டின் அருகே ரோட்டில் கிடந்தது. விழாகுழுவினர் மீண்டும் எடுத்து வந்து அதே இடத்தில் வைத்தனர். போலீசார் விசாரிக்கின்றனர்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement