Advertisement

கேங்மேன் வேலை எப்ப தருவீங்க? 1,500 பேர் குவிந்ததால் ஸ்டாலின் ஆபீஸ் முன் பதற்றம் | Stalin | Kolathur

2019ம் ஆண்டு மின் வாரியத்தில் கேங்மேன் வேலைக்கு விண்ணப்பம் விநியோகிக்கப்பட்டது. எழுத்து, உடல் தகுதி தேர்வில் 15 ஆயிரம் பேர் பங்கேற்றனர். 9,613 பேர் தேர்வாகினர். 4 ஆயித்துக்கும் அதிகமானோருக்கு வேலை வழங்கப்பட்டது. 5,493 பேருக்கு உடனடியாக வேலை தரவில்லை. இவர்கள் பல கட்ட போராட்டங்களை நடத்தி பார்த்தனர். பலன் இல்லை. இன்று திடீரென முதல்வர் ஸ்டாலின் தொகுதியான கொளத்தூரில் 1,500 பேர் திரண்டனர். அவரது அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. அனைவரையும் போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர்.

Comments Comments


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement